Friday, May 29, 2015

பல்சான் விருது - Balzan Award

பல்சான் விருது - Balzan Award
1956 இல் அஞ்சலா லீனா பல்சான் எனும் இத்தாலியப் பெண் தொழிலதி பரினால் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் முதலாவது விருது 1961 இல் இருந்தே வழங்கப்பட்டது. இது சுவிற்சலாந்து நாட்டின் உயரிய விருதாகும்.
இப்பரிசுகளுக்கான நியமனங்கள் மே மாதத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரிசாளர்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டில் இருந்து பரிசுத் தொகை 1 மில்லியன் சுவிஸ் பிராங்குகளாக அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் இப்பரிசுத் தொகையின் அரைப்பங்கு இளம் ஆய்வாளர்களின் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது ஒரு நிபந்தனை ஆகும்.
இதன் பரிசுத் தொகை நோபல் பரிசை விட பெறுமதி கூடியதாகும்.
1978 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நால்வருக்கு பின்வரும் துறைகளின் கீழ் இப்பரிசு வழங்கப்படுகின்றது.
மானிடவியல், சமூகவியல், கலை, இயற்பியல், கணிதம், இயற்கை அறிவியல், மருத்துவம்

No comments:

Post a Comment